சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களை ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?
தற்பொழுது நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பதிவில் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை என்றாலே தேர்ந்தெடுப்பது சிங்கப்பூர் தான். ஏனென்றால் சம்பளம் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது அதிகம். அதே போல் மிகவும் பாதுகாப்பான நாடு. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டதிட்டங்களும் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் சமீப காலமாக உங்களிடம் அனைத்து டாக்குமெண்ட்களும் சரியாக இருந்தாலும் நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் உங்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதற்கான ஒரு சில காரணங்கள் இதோ.
1. தவறான தகவல்! நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு உங்களுடைய வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தை மனிதவள அமைச்சிடம்(MOM) அனுமதி வாங்க வேண்டும். மனித வள அமைச்சில் விண்ணப்பிக்கும் பொழுது ஒரு சில முதலாளிகள் அதில் தவறான தகவல்களை பதிவிடுகிறார்கள். சம்பளம், உங்களுடைய வேலை பொசிஷன் ஆகும். இது போன்ற தவறான தகவல்களை சொல்வதால் உங்களை திருப்பி அனுப்புகிறார்கள். குறிப்பாக இ Pass மற்றும் TEP pass.
2. தகுந்த ஆவணங்கள் இல்லாததால்! சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டியது உங்களிடம் சரியான ஆவணங்கள் உள்ளதா என்பதை பொருத்து தான். சிங்கப்பூரில் பலவிதமான பாஸ்கள் உள்ளது. இந்த பாஸ்களில் நீங்கள் செல்லும் பொழுது ஒவ்வொரு விதமான பாசிற்கும் ஒவ்வொரு விதமான டாக்குமென்ட்கள் தேவைப்படும். அந்த டாக்குமென்ட்கள் உங்களிடம் இல்லை என்றால் உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் NTS பர்மீட்டில் செல்கிறீர்கள் என்றால், உங்களிடம் பாண்டு பேப்பர் இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் S PASS இல் செல்கிறீர்கள் என்றால் அதற்கு பாண்டு பேப்பர் தேவையில்லை.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலேயே அந்த மாதத்திற்கு தேவையான டாக்குமென்ட்கள் என்னென்ன? என்று நாம் பதிவிட்டு வருகிறோம். அதை பார்த்து உங்கள் டாக்குமெண்ட்களை தெளிவாக எடுத்துச் சென்றால் நீங்கள் பிரச்சினை இல்லாமல் சிங்கப்பூருக்குள் செல்லலாம்
3. பொய்யான தகவல்களை கொடுப்பது! சிங்கப்பூர் செல்லும் ஒரு சிலர் சிங்கப்பூர் இமிகிரேஷனில் கேட்கப்படும் கேள்விக்கு பொய்யான தகவல்களை சொல்லுவது. உதாரணத்திற்கு ஒருவர் சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசாவில் செல்கிறார் என்றால், அங்கு அவருக்கு சுற்றி பார்க்க மட்டுமே அனுமதி உண்டு. வேலை தேட அனுமதி கிடையாது. ஆனால் சிலர் சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காகவே டூரிஸ்ட் விசாவில் செல்கின்றனர். இதை அதிகாரிகள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் உங்களை திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
இதுபோன்று இன்னும் ஒரு சில காரணங்களால் உங்களை சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தற்பொழுது சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. எனவே நீங்கள் செல்லும் பொழுது மிகவும் கவனத்துடன் உரிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு சரியான வழியில் செல்வது நல்லது.
நம்முடைய அடுத்த பதிவில் நீங்கள் சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
இது போன்ற பயனுள்ள சிங்கப்பூர் தகவல்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது சாத்தியம் இணைய பக்கம், முகநூல் பக்கம்(Facebook), இன்ஸ்டாகிராம் மற்றும் telegram பக்கத்தில் இணைந்திருங்கள்.