சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு : SIA விமானம் மீது கேட்டரிங் லாரி மோதல்..!!
சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SIA) மீது கேட்டரிங் லாரி மோதியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 12:35 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நோக்கி புறப்பட இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏறுப்பதற்கு முன்பு அந்த விமானம் ஒரு உணவு வழங்கும் தள்ளுவண்டி உடன் மோதி உள்ளது.
அதனால் விமானத்தில் இயந்திரம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து A380 விமானத்தின் இயந்திரம் ஆய்வு செய்யப்பட்ட பழுது பார்க்கப்பட வேண்டியிருந்த காரணத்தினால், அந்த விமானத்திற்கு பதிலாக மற்றொரு விமானம் பயன்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவுகளும் வானங்களும் கொடுக்கப்பட்டதாக SIA கூறியுள்ளது.
452 பயணி மற்றும் 28 பணியாளர்களை ஏற்றி ச்சென்ற அந்த விமானம் அன்று பிற்பகல் 2:13 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரப்படி 8:40 மணிக்கு ஜெர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட் விமான நிலையத்துக்கு வந்தடைந்துள்ளது.
முந்தைய விமான தாமதங்கள் மற்றும் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக புறப்பட இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இரு விமானங்களும் தாமதமடைந்துள்ளதாகவும் SIA கூறியுள்ளது.
சேதமடைந்த என்ஜின் னலிங் செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட விமானம் மீண்டும் சேவைக்குத் திரும்பி விட்டதாகவும் SIA தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் SIA நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது என்பதையும் வலியுறுத்தி உள்ளது.