குழந்தைகள் விழா நடத்திய சீன கலாச்சாரம் மையம்..!!உற்சாகம் காட்டும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்..!!
சிங்கப்பூர் : வரவிருக்கும் ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் தனது முதல் குழந்தைகள் கலாச்சார விழாவை நடத்த உள்ளது. இந்த விழா “Fun Park” என்று கூறப்படுகிறது.
இந்த விழாவானது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் கதை சொல்லுதல், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கருவிகள் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களது மொழியை கற்க உள்ளனர்.
இந்த விழாவானது 3 நாள் கலாச்சார விழாவாக நடைபெற உள்ளது. இதில் 16 உற்சாகமான செயல்பாடுகள் இடம்பெற உள்ளன.
“குழந்தைகள் கேளிக்கை பூங்கா” ஜூன் 19ஆம் தேதி 21ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது இதில் 16 நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. இது ஒரு முக்கிய அம்சமாக மங்கிப் பேப்பர் தியேட்டரின் “புராண முத்தொகுப்பு :நேஷா ” என்ற நிகழ்ச்சி இடம்பெறும்.
பார்வையாளர்கள் டிராகன் நடனங்கள், ஆற்றல்மிக்க நேரடி தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் ஃபியூசன் இசைக்குழுவான ” Frame of the first” மற்றும் சென் குவோஜூன் அமைத்த இசையையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த விழாவின் சிறப்பம்சம் பயிற்சி அரங்கில் “புதிய மழலையர் பாடல்கள் திட்டம் 4” தொடங்கப்படுவதாகும். இது “லிட்டில் ஒயிட் போட்” மற்றும் “ஒன்லி மதர் இஸ் குட் இன் தி வேர்ல்ட்” போன்ற பாரம்பரிய மாண்டரின் குழந்தைகள் பாடல்களுக்கு இசை மற்றும் ஊடாடும் நாடக்க கதைகள் மூலம் புத்துயிர் அளித்து, குழந்தைகள் சிறு வயதிலிருந்தே சீன மொழியுடன் தங்களை இணைத்துக் கொள்வதற்கு உதவுகிறது
இந்த விழாவில் பெற்றோரும் குழந்தைகளும் கதைகள் கேட்கவும், இனிப்பு வகைகளைத் தயாரிக்கவும், விளையாடவும், பழக்கவழக்கங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
சிங்கப்பூர் சீன கலாச்சார மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி , திரு. சென் ஜியு இந்த விழா பற்றி கூறியதாவது: குழந்தைகள் திருவிழாவின் மூலம் உள்ளூர் சீன கலாச்சாரம் மற்றும் மாண்டரின் மொழி மீதான குழந்தைகளின் ஆர்வத்தை ஈடுபாட்டுடனும் கல்வி ரீதியாகவும் தூண்டவும், அவர்களை ஊக்கு விக்கவும் இந்த விழா உதவியாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
மேலும் மக்கள் சங்கம் “குழந்தைகள் கேளிக்கை பூங்கா” உடன் இணைந்து தொடர்ச்சியான இலவச கதைப் பகிர்வு அமர்வுகளையும் வழங்க இருக்கிறது. பங்கேற்பாளர்களை சிங்கேஅணிவகுப்பின் வரலாறு மற்றும் மரபுகளைப் பற்றி அறிய அனுமதிக்கிறது.
இந்த பாரம்பரிய விழாவின் முழுமையான நிகழ்ச்சி அட்டவணை, டிக்கெட் மற்றும் பதிவு விவரங்கள் பற்றி அறிய http://singaporen.sg/cp-zh என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.