சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!!

சிங்கப்பூரில் நடுரோட்டில் ஏற்பட்ட சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!!

சிங்கப்பூர் : நார்த் பிரிட்ஜ் சாலைக்கு அருகே கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. நடுப் பாதையில் இருந்து ஒரு கார் வலது புறம் திரும்பியதால் 2 மோட்டார் சைக்கிள்கள் தொடர் மோதலுக்கு உள்ளாகின.

இதில் 62 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாார்.

Sgfollowsall என்பவரால் இன்று (ஏப்ரல் 25 ) இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது . அதில் ஒரு அடர் நிற செடான் கார் ஒன்று சிக்னல் காட்டாமல் நடுப்பாதையில் இருந்து திடீரென வலது புறம் திரும்புவது தெரிகிறது.

வலதுபுறப் பாதையின் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிளால் அதை தவிர்க்க முடியாமல் அந்த ஷெடான் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளாலும் அதை தவிர்க்க முடியாமல் முன்னாள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் 2 ஓட்டுநர்களும் அவர்களது மோட்டார் சைக்கிள்களும் தரையில் விழுந்தன.

நேற்று (ஏப்ரல் 24) பிற்பகல் சுமார் 1:45 மணி அளவில் நார்த் பிரிட்ஜ் சாலையிலிருந்து, சவுத் பிரிட்ஜ் சாலையை நோக்கி செல்லும் வழியில் சாலை விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறையினர் கூறினர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராஃபிளஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து குறித்த விசாரணையை காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK