சிறைச்சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த "The Purple Symphony"..!!
சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிறைத்துறை கைதிகளுடன் இணைந்து பர்பிள் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (The Purple Symphony) ஒரு இசை நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 27) நடத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளும், சிறைக் கைதிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேறுபட்ட இந்த இரு குழுக்களும் சாங்கி சிறையில் நம்பிக்கையையும் மறுபிறப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் இசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
மத்திய மாவட்ட சமூக மேம்பாட்டு கழகமும், சிங்கப்பூர் சிறைத்துறையும் இணைந்து இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர்
இதில் சிங்கப்பூரின் மிகப்பெரிய இசைக்குழுவான “The Purple Symphony” மற்றும் சிங்கப்பூர் சிறைத் துறையின் கீழ் உள்ள கலைநிகழ்ச்சி மையத்தை சேர்ந்த கைதிகளும் ஒன்றினைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தயாராக ஒரு கூட்டு ஒத்திகையை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அன்று இந்த இரு குழுக்களும் தனித்தனியாக பயிற்சி செய்துள்ளனர். தங்கள் நிகழ்ச்சியின் மூலம் கருத்துக்களைப் பரிமாறி கொள்ளவும் நல்உறவை வளர்த்துக் கொள்ளவும் இந்த வாய்ப்பை அந்த குழுக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இசைக்குழுவின் கிடார் கலைஞரான ஃபாஸி , சிறையில் இருந்த கடினமான காலங்களில் இசை தனக்கு ஆறுதலையும் வழிமையும் அளித்ததாகவும், இசையானது உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருப்பதால் ஒரு நிறைவான அனுபவம் இசையில் கிடைப்பதாக அவர் இசை குறித்து கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இசை கலைஞர்களில் சிலர் ஆட்டிசம் குறைபாடு உடையவர்கள் . ஆனாலும் கூட அவர்கள் இசை தொடங்கியதும் அவர்கள் படிப்படியாக அந்த சூழலுக்குள் ஒன்றிவிட்டதாக நிகழ்ச்சியின் கலை இயக்குநர் குவோ யோங்டே அவர்கள் கூறியுள்ளார்.
மத்திய சிங்கப்பூர் நேரம், பர்பிள் சிம்பொனி இசைக்குழுவின் ஆலோசகரமான பான் லிப்பிங் அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.
இசை என்பது அடையாளங்களைக் கடந்து நிற்கும் ஒரு உலகளாவிய மொழி எனவும் , இந்த முயற்சியானது சமூக ஆதரவுடன் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வளர முடியும் என்பதையும் நிரூபிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.