சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய அதிர்ச்சி..!! தண்டனைகள் மேலும் கடுமை..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமத்தை இழந்த பிறகும் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனைகளின் வரம்பை சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கடுமையாக்கியுள்ளது.

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியதாக 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது இந்த புதிய விதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உயிரைப் பறித்த ஒரு விபத்திற்கு பிறகு 46 வயது நபருக்கு 5 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இருந்தும் அந்த தடையை மீறி அந்த நபர் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனமோட்டிய போது காவல்துறையினர் அவரை மறித்து ஓட்டுநர் உரிமத்தை சோதித்து பார்த்தபோது அவர் தடையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதற்காக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு $5,000 அபராதமும், 2 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால் அந்த தண்டனை அவருக்கு போதாது என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டிருந்தது. அதை இந்த ஆண்டு 22ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து உரிமம் இல்லாத ஓட்டுநர்களின் பல்வேறு வகைகளை தெளிவுப்படுத்தும் வகையில் மே 26 ஆம் தேதி திரு மேனன் எழுத்துப்பூர்வ காரணங்களை வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் வாகனம் ஓட்ட இயலாத நிலை என்பது அவரது உரிமத்தை முழுமையாக ரத்து செய்யும் அளவிற்கு தீவிரமான முந்தைய நடத்தையின் விளைவாகும். அப்படி இருந்தும் அந்த நபர் வாகனம் ஓட்டியது சாலைகளைப் பயன்படுத்த மற்றவர்களின் பாதுகாப்பு மீது அவர் கொண்டுள்ள அலட்சியத்தை குறிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வாகனம் மற்றும் குற்றத்திற்கான தண்டனை வரம்புகளை நீதிமன்றங்கள் முன்மாதிரிகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK