டெல்லி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து..!! 21 பேர் பலி..!!
புதுடெல்லி: ஜூன் 3ஆம் தேதி அன்று காலை தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 21 பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த தகவலானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து டெல்லி தீயணைப்பு சேவை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியதில் தீ ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீப்பற்றிய கட்டிடத்தில் இயங்கிவரும் உணவகத்தில் இருந்துதான் இந்த தீ ஏற்பட்டிருக்க கூடும் என்று தற்போது கூறப்படுகிறது.மேலும் மின் கசிவு கூட இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்துள்ள அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைகிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களில் பல வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மீட்பு குழுவினர் விரைவாக செயல்பட்டதால் பலர் மீட்கப்பட்ட தாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அரசு சார்பாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.