சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!!
சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி இரவு சுமார் 11:25 மணி அளவில் பெடோக் ரிசர்வாயர் காலையில் உள்ள பிளாக் 616 இல் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு சென்ற பொழுது வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 12 முதல் 17 வயதிற்கு உட்பட்ட ஏழு சிறுமிகள் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
உடனே 14 வயது சிறுமியை சுயநினைவுடன் கே கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.