டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..??
சிங்கப்பூரில் ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு வீரியம் குறைக்கப்பட்ட டெங்கு கிருமி செலுத்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
டெங்கு நோய் குறித்து ஆய்வாளர்கள் மேலும் அறிந்து கொள்ளலாம். இந்த புதிய முயற்சியை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிலையம் அடுத்த சில மாதங்களுக்கு தரவுகளை பகுப்பாய்வு செய்து அடுத்த ஆண்டு (2027) அதன் முடிவுகளை அறிவிக்கும்.
முதன்முறையாக நடத்தப்படும் ஆய்வில் கலந்து கொள்வதற்கும் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் முன்வந்துள்ளனர். டெங்கு கிருமி செலுத்தப்பட்டு தற்போது அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.
தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் முன்னோடி ஆய்வு, டெங்கு நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவது இது பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.