பொங்கோலில் தானியங்கி வாகன சோதனை திட்டம்..!! ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..!!

பொங்கோலில் தானியங்கி வாகன சோதனை திட்டம்..!! ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..!!

சிங்கப்பூரில் பொங்கோல் வட்டாரத்தில் தானியங்கி வாகன சேவைக்கான சோதனை திட்டத்தை கம்பர்ட்டெல்குரோ நிறுவனமும், கிராப் நிறுவனமும் நடத்தி வருகின்றன.

அந்த வட்டாரங்களில் வர்த்தக ரீதியிலாக தானியங்கி வாகன சேவையை தொடங்குவதற்கு முன்னதாக இந்த சோதனை திட்டம் நடத்தப்படுகிறது.

இந்த திட்டமானது ஏப்ரல் மாதம் 7- ஆம் தேதி தொடங்கியது. இதில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தானியங்கி வாகன சேவைகளைப் பெற பொதுமக்கள் எப்போது பதிவு செய்யலாம் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் (LTA) இணைந்து கம்ஃபர்ட்டெல் குரோ செயல்பட்டு வருகிறது.

கிராப் நிறுவனம் அதன் தானியங்கி வாகன சேவை மூலம் இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவையை வழங்கி உள்ளது. தனது தானியங்கி வாகன சேவை இதுவரை 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக பதிவு செய்திருப்பதாக கிராப் நிறுவனம் நேற்று (ஜூன் 12) தெரிவித்துள்ளது.

கிராப் நிறுவனத்தின் இந்த திட்டமானது ஜனவரி மாதம் தொடங்கியது. இடைவெளி தானே அங்கே வாகன சேவையை பொதுமக்கள் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் வசூலிக்கப்படும் தானியங்கி வாகன சேவைகள் குறித்து கிராப் நிறுவனமும் இதுவரை தகவல் வெளியிடவில்லை. இந்த சேவைகள் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK