நீதி அனைவருக்கும் சமமா..? சிங்கப்பூரின் முதல் சட்ட நிலையம் வழங்கும் உதவிகள் என்ன..?

நீதி அனைவருக்கும் சமமா..? சிங்கப்பூரின் முதல் சட்ட நிலையம் வழங்கும் உதவிகள் என்ன..?

சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய முதல் நீதி சட்ட நிலையம் அதன் தேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்க உள்ளது.

சிறப்பு தேவை உள்ளவர்களுக்கு நீதி கிடைப்பதை எளிதாகுவது இந்த புதிய திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகும்.

இந்நிலையத்தில் வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள்,மனோவியல் நிபுணர்கள், சிறப்பு தேவைத்துறை நிபுணர்கள் ஆகியோரை இணைந்து பணியாற்றுவார்கள்.

சிங்கப்பூர் சட்டக் கழகத்தின் Pro Bono SG என்ற அமைப்பு இந்த நிலையத்தை வழிநடத்துகிறது. சிங்கப்பூரில் 30 பேரில் ஒருவருக்கு உடல்நல குறைபாடு உள்ளது.

அவர்களில் அதிகமானோர் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தொடர்பு திறன் குறைபாடுகளும் முதல் Schizophrenia போன்ற மனநோய் வரை பலவிதமான குறைபாடுகள் உள்ளவர்களும் உள்ளனர்.

அதனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவியைப் பெறுவது என்பது அவர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும்.

இந்த புதிய நிலையம் ஆனது ஒரு இடத்தில் இருந்து செயல்படுவதற்கு பதிலாக சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் அமைய உள்ளது. 20 சமூக அமைப்புகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை Pro Bono SG நடத்தியுள்ளது. இதில் சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK