இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

இந்த SMS உங்களுக்கும் வருகிறதா..??சுங்கத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பொதி விடுவிப்பு (Parcel Delivery) மோசடிகள் குறித்து வரும் குறுஞ்செய்திகள் பற்றி பொதுமக்களுக்கு சுங்கத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

சுங்கத்துறையினரிடம் பொட்டலங்கள் இருப்பதாகவும் , அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு தங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு மோசடி நடத்தப்படுகிறது.

இது குறித்து இன்று (ஜூன் 17) தனது முகநூல் பக்கத்தில் சுங்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு: 

👉எந்த ஒரு அரசு துறையும் தொலைபேசி வழியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அபராதம் அல்லது கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறாது எனவும் அதனால் பொதுமக்கள் பணத்தை அனுப்ப வேண்டாம்.


👉குறுஞ்செய்தி (SMS) அல்லது Whatsapp மூலம் வரும் சந்தேகத்திற்கு இடமான லிங்குகளை (Links) ஒருபோதும் பொதுமக்கள் கிளிக் செய்ய வேண்டாம்.

👉உங்கள் வங்கி கடன் அட்டை விவரங்கள் அல்லது ஓடிபி (OTP) போன்ற தனிப்பட்ட விவரங்களைத் தெரியாத நபர்களிடம் பகிரவோ, வெளியிடவும் கூடாது.

👉உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனம் அல்லது சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.

👉 இது போன்ற மோசடிகள் தங்களுக்கு நடந்திருந்தால் அவர்கள் உடனடியாக 1799 என்ற ஸ்கேம்ஷீல்டின் மோசடி தடுப்பு உதவி எண்ணான 1799 -யைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

அவசர உணர்வை உருவாக்குதல், காலக்கெடுவை நிர்ணயித்தல் மற்றும் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களைத் திருடக்கூடிய இணைப்புகளை சேர்த்தல் ஆகியவை மோசடிகளின் பொதுவான அம்சங்கள் என்று பொதுமக்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் நினைவுப்படுத்தி உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK