ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!!

ரிவர்வேல் மாலில் எதிர்பாராத விபத்து..!! சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை..!!

சிங்கப்பூர்: செங்காங் ரிவர்வேல் வணிக வளாகத்தில் (Mall) இருந்த பெயர் பலகை ஒன்று சரிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ரிவர்வேல் வணிக வளாகத்தில் உள்ள உணவு மையத்தில் ஜூன் 20ஆம் தேதி அன்று காலை நேரத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

இது குறித்த அன்று காலை 10:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.

கே கே மகளிர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கிகிச்சைப் பெற்ற சிறுவன் தற்போது வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் SCDF கூறியுள்ளது.

டிக் டாக் சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளிகளில் பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிப்பாடுகள் நுழைவாயில் முழுமையாக மூடி இருப்பது தெரிகிறது.

இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வணிக வளாக நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டது எனவும் சம்பந்தப்பட்ட உணவு மையத்தின் செய்த தொடர்பாளர் கூறியுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு அம்சங்கள் இன்னும் பலப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பெயர்பலகை விழுந்த நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில் இப்போது திறக்கப்பட்டு உணவு மையம் மீண்டும் தொடங்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK