இது குறித்த நேற்று (ஜூன் 223 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த புதிய கட்டண முறையானது தங்களின் தற்போதைய கோட்ஷேர் கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் இந்த உலகத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரயன் ஃபூங், இந்த ஒத்துழைப்பு தங்களது வணிகக் கூட்டாண்மையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்று இந்த கட்டண முறை குறித்து கூறியுள்ளார்.
இந்த புதிய கட்டண முறையால் கிடைக்கும் வசதிகள்: இரு விமான நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கும் விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தும் வசதி, ஒருங்கிணைக்கப்பட்ட விமான அட்டவணைகள் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான கூட்டுப் பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட கூடுதல் பயணிகளின் நலன்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பரந்த அளவிலான கட்டணம் தெரிவுகளும் நெகிழ்வுத் தன்மையும் இதன் மூலம் கிடைக்கும்.
இரு விமான நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நெட்வொர்க்களின் (Combined Networks) வழியாக பயணிகள் தங்களின் பயணங்களை தடையின்றி திட்டமிட முடியும். இரு நிறுவனங்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வணிக ஒத்துழைப்புக்கானக் கட்டமைப்பில் (Commercial Cooperation Framework) கையெழுத்திட்டன.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தங்களின் அடிக்கடி பயணிப்போர் திட்டங்களான Krisflyer மற்றும் Enrich புள்ளிகளைப் பரஸ்பரம் மாற்றுவதற்கும் பெறுவதற்கும் வழிவகை செய்தனர். இப்போது இந்த புதிய கூட்டுக் கட்டணத் திட்டத்தின் மூலம் இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான வான்வழி தொடர்பு மேலும் பலமடைந்துள்ளது.