லோரோங் ஹருஸ் அருகே பரபரப்பு..!! மின்னல் தாக்கி எரிந்த மீன்பிடி படகுகள்..!!

லோரோங் ஹருஸ் அருகே பரபரப்பு..!! மின்னல் தாக்கி எரிந்த மீன்பிடி படகுகள்..!!

சிங்கப்பூர்: நேற்று இரவு (ஜூன் 24) புலாவ் உபின் தீவுக்கு அருகில் உள்ள லோரோங் ஹாலஸ் ஜெட்டிக்கு அருகே உள்ள கடற்பரப்பில் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நங்கூரம் இடப்பட்டிருந்தால் சில மீன்பிடிப் படகுகள் மீது மின்னல் தாக்கியதில் , தீ வேகமாக பரவி அருகில் உள்ள 2 மீன் பண்ணைகளை அது பாதித்துள்ளது.

இந்த பயங்கர விபத்தால் கணிசமான இழப்புகள் ஏற்பட கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (ஜூன் 24) இரவு சுமார் 8:00 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 2 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாக தீ எரிந்துள்ளது. தீயை அணைப்பதற்காக அதிகாரிகள், 4 காவல் படகுகள், 2 குடிமைப் பாதுகாப்புப் படகுகள் மற்றும் 1 இழுவைப் படகு ஆகியவற்றை பயன்படுத்தினர்.

நிலைமையைக் கண்ட அருகில் உள்ள மீன் பண்ணைத் தொழிலாளர்களும் தீயை அணைப்பதற்கு அதிகாரிகளுடன் சேர்ந்து உதவியதாக பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

அருகிலுள்ள 2 சீ பாஸ் மீன் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பிடப்பட்ட பொருளாதார இழப்புகள் மிகவும் கடுமையானவை எனவும் சிங்கப்பூர் மீன்வளம் மற்றும் விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

மீன்வளம் மட்டுமே விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜெங் மிங்ஸிங் இந்த விபத்து குறித்து கூறியதாவது: மீன் பண்ணைகளின் உரிமையாளர்கள் அனைவரும் அவரை சந்திப்பதற்கு வந்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீ பாஸ், ஸ்னாப்பர் மற்றும் குரூப்பர் போன்ற மீன்களை வளர்க்க இந்த பகுதி பயன்படுத்தப்பட்டடு வருகிறது, அவை அனைத்தும் அதிக மதிப்புள்ள மீன்களாகும். இந்த விபத்தில் பல மீன் வளர்ப்பு பண்ணைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணைகளில் சுமார் பாதி இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) மற்றும் சாங்கி விமான நிலையத்தில் விமான நிலைய அவசர சேவை ஆகியவற்றின் கப்பல்களால் இறுதியில் தீ அமைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விபத்து குறித்த காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.