MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!!

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!!

சிங்கப்பூர்: MOM ஜூன் 26 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற சம்பவங்கள் கவலைக்குரியது என்றும் மேலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பணியிட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது.

இதனால் பல்வகை முகமை பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிக்குழு அமைப்புகளின் ஆதரவுடன் பல பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது என்றும் MOM கூறியுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில், ஏற்பட்ட ஏழு மரணங்களில் உட்பட, தொடர்ந்து அதிகரித்த வருகின்ற பணியிட விபத்துகளையும் தொடர்ந்து மனிதவள அமைச்சு(MOM) புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளது.

ஜூன் 26 முதல் அனைத்து பணியிடங்களிலும் இரண்டு வாரங்களுக்கு தன்னார்வ பாதுகாப்பு இடைவேளையை அமல்படுத்த வேண்டும் என்று MOM அழைப்பு விடுத்துள்ளது. பணியிட அபாயங்களை மதிப்பீடு செய்து தொழிலாளர்களுடன் பாதுகாப்பு நடைமுறைகளையும் மறு ஆய்வு செய்யுமாறும் முதலாளிகளுக்கு MOM அறிவுறுத்தியுள்ளது.

முதன்முறையாக பாதுகாப்பு விதிகளில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கான அபராதம் S$2,000 லிருந்து S$3,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் MOM கூறியுள்ளது.

பணியிடங்களில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பணிநிறுத்தம் செய்யப்பட்டால் அந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. இதற்கு முன்பாக 5 வாரங்களாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான பாதுகாப்பு குறைபாடுகளால் மரணம் அல்லது கடுமையான விபத்துகள் ஏற்படும் நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்படும் என்று MOM தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஜூலை 31 வரை அமலில் இருக்கும். பாதுகாப்பு விளைவுகள் மேம்படவில்லை எனில் இவை மேலும் நீட்டிக்கப்படும் என்று MOM தெரிவித்துள்ளது.

NTUC யின் உதவி இப்போது செயலாளரும் ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் யோங், தேசிய பாதுகாப்பு இடைநிறுத்தம் வலுவான அமலாக்க நடவடிக்கை மற்றும் கடுமையான தண்டனைகள் ஆகியவற்றிற்கான MOM இன் அழைப்பை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பாதுகாப்பிற்கே எப்போதும் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK