இது விளையாட்டா... உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.
போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’ அல்லது ‘AnyWheel’ போன்ற பகிரப்பட்ட மிதிவண்டிகளைப் பயன்படுத்தி அதி வேகமாக துரத்திச் செல்வதை மற்ற வாகன ஓட்டிகளை நிலைத்தடுமாறச் செய்யும்.
இத்தகைய சாகசங்களால் மிதிவண்டி ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தால், பின்னால் வரும் பேருந்து அல்லது கார்களின் சக்கரங்களுக்குள் சிக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் மிக அதிகம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் இக்காணொளியைப் பார்த்த இணையவாசிகள் இவர்களை ‘சாலையின் ராஜாக்கள்’ என நையாண்டி செய்து, தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பகிரப்பட்ட மிதிவண்டிகள் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மட்டுமே ; அதை சாலைகளில் ஆபத்தான பந்தயங்களில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) தீவிர நடமாட்ட விதிகளின் படி, பொதுச் சாலையில் பொறுப்பற்ற முறையில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து விதிமுறைககளை மதிக்காமல் பந்தயத்தில் ஈடுபடும் மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு முதல் குற்றமாக இருந்தால் $150 உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.
பிற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து விளைவிக்கம் வகையில் செயல்பட்டால், நீதிமன்றத்தின் மூலம் கடுமையான அபராதமும் சிறை தண்டனையும் அவர்களுக்கு விதிக்கப்படும்.
பகிரப்பட்ட மிதிவண்டி நிறுவனங்களும் தங்களின் சொத்துக்களைத் தவறாக பயன்படுத்துவோர் மீதும், பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் காவல்துறையில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றன.