தெம்பனிஸில் நடந்த கொடூர விபத்து..!! குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன..??
சிங்கப்பூரின் தெம்பனீஸ் (Tampines)பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான 6 வாகன விபத்து வழக்கில், ஓட்டுநர் முகம்மது ஹஃபி இஸ்மாயில் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
விபத்து நடந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் (Traffic Light) சுமார் 26 விநாடிகளாக சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இருப்பினும்,மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அந்த சாலையில், அவர் தனது காரை மணிக்கு 129 கி.மீ முதல் 134 கி.மீ வரையிலான மிக அதிவேகத்தில் ஓட்டியுள்ளார்.
சம்பவத்தன்று காலை மற்றொரு கார் ஓட்டுநர் இவரை முந்தியதால் (Overtake) ஆத்திரமடைந்த முகம்மது ஷஃபி, அந்த காரைப் பின் தொடர்ந்து ஆபத்தான முறையில் லேன்களை (Lanes) மாற்றி அதிவேகமாகச் சென்றுள்ளார்.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில் சிக்கி அஃபிஃபா முனிரா முகமது அஸ்ரில் (17 வயது) என்ற டெமாசெக் ஜூனியர் கல்லூரி மாணவியும், நொர்சிஹான் ஜுவாஹிப் (57 வயதி) என்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 3 கார்கள், 1வேன், 1மினி பேருந்து ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் பெரும்பாலானவை தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களுடையது. இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்காக அவருக்கு 2 முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஓட்டுவதற்குக் காலவரையற்ற தடையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.