சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை அதிகாலை 1:15 மணியளவில் ஹவ்காங் மற்றும் ஏவியேசன் டிரைவ் சந்திப்பிற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

சாலையில் சென்று கொண்டிருந்த கார்த்தி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பயங்கரமாக சறுக்கிச் சென்று அங்குள்ள ஒரு மரத்தின் மீது பலமாக மோதி உள்ளது.

மரத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கிய நிலையில் காணப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF அதிகாரிகள் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்க ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தினர்.

பிறகு காரிலிருந்து மீட்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது காரில் வேறு பயணிகள் யாரும் இல்லை என்றும், இதில் வேறு வாகனங்கள்எதுவும் சம்பந்தப்படவில்லை என்றும் முதற்கட்ட சாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர விபத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK