தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!

ஜூலை 19 காலை 11:30 மணியிலிருந்து மலேசியாவில் அனைத்து குடிநுழைவுச் சோதனை சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தானாக திறக்கக்கூடிய கதவுகள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மலேசியர்கள் பயன்படுத்தும் தானாக திறக்கும் குடிநிறைவு கதவுகளில் எந்த கோளாறும் இல்லை அதனால் அவர்கள் வழக்கம் போல விரைவாக குடி நுழைவு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த தொழில்நுட்ப கோளாறு வெள்ளிக்கிழமை ஜூலை 18 தொடங்கியதாக கூறப்படுகிறது இதனால் மலேசியாவில் 200க்கும் அதிகமான தானாக திறக்கும் கதவுகள் பாதிக்கப்பட்டன.

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது மலேசியா கோலாலம்பூர் அனைத்து உலக விமான நிலையம் முனையம் 1 மற்றும் 2 ஜோரூரில் உள்ள பிஎஸ்ஐ, கேஎஸ்ஏபி சோதனைச் சாவடிகள்.

தொழில்நுட்ப கோளாற்றை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக மலேசியா குடல் துறை தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan