அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!!
பேரிடர் மேலாண்மை குறித்த ஆசியான் மூலோபாயக் கொள்கை உரையாடலில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்த அமைப்பை நிறுவ உள்ளூர் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுடன் சிவில் பாதுகாப்பு படையினை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு நேரடியாக எச்சரிக்கைகளை விரைவாக அனுப்பி அவர்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்க இந்த தகவல் தொடர்பு ஒளிபரப்பு முறை உதவும்.
பேரிடர் மேலாண்மை வலுப்படுத்துவதில் இத்தகைய கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை எனவும், ஆசியான் உறுப்பு நாடுகளான சீனா,ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற பிற கூட்டாளி நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தொடர வேண்டும் எனவும் டோங் கூறினார்.
இந்த ஒத்துழைப்புகளும் நெட்வொர்க்குகளும் சிங்கப்பூரின் அறிவு மற்றும் அனுபவ தளத்தை விரிவுபடுத்தியுள்ளன என்று டோங் கூறினார். நல்ல யோசனைகள் எந்த ஒரு தரப்பினருக்கும் மட்டுமே சொந்தமானது அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதிக பரிமாற்றங்கள் இருந்தால் பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்வதற்கான வாய்ப்புகளாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் மேலும் சிறந்த நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் இதனால் வலிமையாகவும் திறன்களை மேலும் மேம்படுத்தவும் முடியும் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.
அவசர காலங்களில் மொபைல் போன் எச்சரிக்கைகளை அனுப்பும் ஒரு தகவல் தொடர்பு ஒளிபரப்பு முறையில் சிங்கப்பூர் அடுத்த ஆண்டு படிப்படியாக செயல்படுத்த உள்ளது.