குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய சூழல் முகமை (NEA) இன்று (01.08.2025) காலை கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
NEA வெளியிட்ட வானிலை எச்சரிக்கையில், காலை 7.15 மணி முதல் 9.15 மணி வரை தீவிர இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று சிங்கப்பூரின் பல பகுதிகளை பாதிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் நடைமுறையில் இல்லை என்று NEA தெரிவித்துள்ளது.
எனினும், காலை நேரத்தில் பலத்த மழை மற்றும் காற்று தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமத்திரா ஸ்குவால் எனப்படும் பருவமழை சார்ந்த காற்றழுத்த மாற்றங்களால் இத்தகைய திடீர் இடியுடன் கூடிய மழை சிங்கப்பூரில் அதிகம் ஏற்படும்.