சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் 36 வயதான டேனியல் கோ (Daniel Goh) என்பவர் இவ்வாறு செய்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் பெண்ணின் வீட்டு வாசலில் பன்றி இறைச்சியும் விட்டு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறை கூறியதாவது: இந்த சம்பவம் ஆனது மார்ச் 15ஆம் தேதி அன்று நடந்துள்ளதாக கூறினர்.
டேனியல் மீது முஸ்லீம் பெண்ணின் வீட்டு வாசலில் இழிவான சொற்கள் கொண்ட குறிப்பை விட்டுச் சென்றதோடு மட்டுமல்லாமல், வாசலில் பன்றி இறைச்சி துண்டு ஒன்றையும் வைத்துவிட்டு சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சமய நல்லுணர்வை வேண்டுமென்றே அவமரியாதை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் டேனியல் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் , டேனியலுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுபோன்று கடந்த வருடம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சியை அனுப்பிய குற்றத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.