எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், இறந்த தன் சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க, அவரது எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்த பழங்குடியின நபரின் செயலி, அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்ட விரக்தியின் உச்சத்தை காட்டுகிறது.
பழங்குடியின நபரான ஜீத்து முண்டா (50), ஒடிசா மாநிலம், கியோன்ஜார், மலிபோசி (Maliposi) பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கி
காரணம்: ஜனவரி 26, 2026 அன்று இறந்த தன் சகோதரி கல்ராவின் கணக்கிலிருந்து பணம் எடுக்க, பலமுறை வங்கிக்குச் சென்றும் “கணக்கு வைத்திருப்பவர் நேரில் வரவேண்டும்” என அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்: இறப்புச் சான்றிதழ் விதிகள் அறியாத ஜீத்து முண்டா, 3 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சகோதரியின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து, 3 கி.மீ தூரம் சுமந்து வந்து வங்கியில் காட்டியுள்ளார்.
தொடர் நடவடிக்கை: இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், பின்னர் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு, பணத்தை வழங்க ஒப்புக்கொண்டனர்.