சிங்கப்பூர் கடோங்கில் மரம் வெட்டும் பணியின்போது விபத்து..!! 38 வயது தொழிலாளர் உயிரிழப்பு!

சிங்கப்பூர் கடோங்கில் மரம் வெட்டும் பணியின்போது விபத்து..!! 38 வயது தொழிலாளர் உயிரிழப்பு!

சிங்கப்பூரின் கடோங் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 38 வயது தொழிலாளர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அக்டோபர் 13ஆம் தேதி பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் கிரான்போர்ன் சாலையில் (Cranborne Road) நடைபெற்றது.

மரம் வெட்டும் பணியின்போது, மரம் அடிப்பகுதியில் இருந்து திடீரெனச் சரிந்து விழுந்ததில், தொழிலாளியும் மரத்துடன் கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த தொழிலாளர் Soh & Tan Enterprises நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை, மரங்களில் ஏறி மரம் வெட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரம் வெட்டும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு, மரத்தின் நிலை மற்றும் பணிமுறைகள் குறித்து முறையான பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிப் பணியாற்ற வேண்டும் என மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.