ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி?

இந்தியாவின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்தியாவின் சிவில் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி தெரிவித்தது.
விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள் விமானத்தின் தகவல் பெட்டி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்டுள்ள கருப்பு பெட்டி விசாரணைகளுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று விமான விபத்து புலனாய்வு அமைப்பு கூறியது.
விமானங்களில் பொதுவாக 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும்.அவை இரண்டும் சிறியவையாக இருந்தாலும் அது மிக ஆற்றல்மிக்க மின்னணு தரவு பதிவுகள் கருவிகள்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
