சிங்கப்பூர்: பயோ லெபார் சாலையில் வெள்ளிக்கிழமை (23.01.26) காலை நடந்த சம்பவத்தில், ஒரு வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் நடுவில் விழுந்தார். அவருக்கு முன்னால் சென்ற டாக்ஸி திடீரென பிரேக் போட்டதால் சமநிலையை இழந்து கீழே விழுந்தார்.
காலை 9:35 மணியளவில் யூனோஸ் அவென்யூ 5 நோக்கி வாகனம் ஓட்டிச் சென்ற குறுகிய வீடியோ பதிவர் மைக் ஷேரி, சாலையில் கிடந்த அந்த முதியவரை கண்டு உடனடியாக உதவினார்.
போக்குவரத்தைத் தடுத்து,அவரது பாதுகாப்பை உறுதிசெய்து,மோட்டார் சைக்கிளை சாலையோரத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தினார்.
இந்த கருணைச் செயல் முழுவதும் வீடியோவில் பதிவாகி டிக்டோக்கில் பகிரப்பட்டதையடுத்து, பல நெட்டிசன்கள் மைக்கைப் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.
மூதாட்டியின் மகன் எனக் கூறிய ஒருவர், தந்தைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிவில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ புகார்களோ அல்லது உதவிக்கான அழைப்புகளோ வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.