சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடா.?? 2027 முதல் என்ன மாறப் போகிறது..??
சிங்கப்பூரின் புதிய ERP 2.0 ( மின்னணு சுங்கக் கட்டண வசூல் திட்டம்) 2027-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
இதனையொட்டி நுழைவு வாயில்கள் இல்லாத புதிய செயற்கைக்கோள் வழி கட்டண முறையை சோதிப்பதற்காக 1,000 வாகன ஓட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கள ஆய்வுப் பரிசோதனையில் கலந்து கொண்டுள்ளனர்.
சாலைகளில் உள்ள பிரம்மாண்ட சுங்க நுழைவு வாயில்கள் ( Physical Gantries) அகற்றப்படுவதால் வாகன ஓட்டிகளுக்குச் சுங்கக் கட்டணப் பகுதிகளை உணர்த்தும் புதிய சாலைக் குறியீடுகள் மற்றும் அறிவிப்புகளை சோதிப்பதே இந்த செயல்முறையின் முக்கிய நோக்கமாகும்.
ஜூன் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 5 முக்கிய சாலைகளில் 5 வகையான குறியீடுகள் சோதிக்கப்பட உள்ளன.
இந்த 1,000 வாகன ஓட்டிகள் தங்களின் காரில் உள்ள OBU (On-Board-Unit) திரை மூலமாக அதிநவீன வசதிகளை பயன்படுத்தி பார்க்க உள்ளனர். அவை பின் வருமாறு: 👉இருப்பிடம் சார்ந்த சுங்க அறிவிப்புகள்: நுழைவுவாயில் இல்லாத சாலைகளில் கட்டணம் வசூலிக்கும் முறை
👉தானியங்கி சோதனைச் சாவடி கட்டணம்: உட்லண்ட்ஸ் மற்றும் துவா ஸ் சோதனைச் சாவடிகளில் தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துதல்
👉தானியங்கி கார் பார்க் கட்டணம்: ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், 644 சாலை ஒரக் கார்பார்க்குகளில் மொபைல் செயலியின்றி, OBU திரை மூலமாக தானியங்கி முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி
2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் புதிய OBU சாதனம் பொருத்தப்பட்டு இருப்பது என்பது அவசியமாகும்.
ஓட்டுநர்களுக்கு சுங்கப் பகுதி தொடங்குவதை நினைவூட்ட சாலைகளில் நீல நிற வட்டத்திற்குள் “E” என்ற எழுத்து வடிவிலான குறியீடுகளும் நீல நிற பாதைகளும் தற்காலிகமாக போடப்பட்டுள்ளது.விளையாட்டு
வாகன ஓட்டிகள் இந்த புதிய Gantry-Less கட்டண முறைக்கு மாறுவதற்கு ஏற்றவாறு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இந்த சோதனையின் மூலம் கருத்துக்களை சேகரித்து இறுதி மாற்றங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.