தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!!
தினமும் உண்ணும் உணவுகளில் இருந்தும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை உணர்வதே இல்லை. கவனத்தில் கொள்வதுமில்லை. பூண்டு, வெங்காயம், காபி, புகையிலை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது.
ஏனெனில் அவை கடுமையான வாய் துர்நாற்றத்தையும், நாவறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு இடம் கொடுக்காமல் சுவாசத்தை இயற்கையாக புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில விஷயங்களை பின்பற்றுவது அவசியமானது.