67 வயது முதியவர் மீது கொலை முயற்சி..!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை என்ன..??
சிங்கப்பூரில் கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த ஒரு சண்டை தொடர்பில் 67 வயது முதியவருக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டக் காரணத்தால் 41 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நடந்த சண்டையில் 41 வயது சுபீர் முகமது தாக்கியதில் 67 வயது சிவராஜு பிச்சை பிள்ளை கடுமையாகக் காயம் அடைந்துள்ளார்.
சம்பவ நாளன்று (ஆகஸ்ட் 3,2024 ) கேலாங் வட்டாரத்திற்கு சட்ட விரோத மாத்திரைகள் வாங்க சபீர் தனது மனைவியுடன் சென்றிருந்தார். அங்கு டான் என்ற நபரிடமிருந்து இலவச இருமல் மருந்தை பெற அவர் முயற்சித்துள்ளார்.
சுபீரின் கோரிக்கையை டான் மறுத்ததை அடுத்து இருமல் மருந்தை வாங்க சிவராஜு சுபீருக்கு $20 பணம் கொடுத்துள்ளார். அதன் பிறகு தம்மிடமிருந்து சில மாத்திரைகள் குறித்து சிவராஜு சுபிரிடம் பேசி உள்ளார்.
சுபீர் சட்டை பையைத் தொட்ட பிறகு அந்த மாத்திரைகளைக் காணவில்லை என்று சிவராஜு கூறியுள்ளார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கியுள்ளது.
மாத்திரைகளை எடுக்கவில்லை என்று கூறிய சுபீர் திரு சிவராஜூவைத் தாக்கத் தொடங்கியுள்ளார். பின் கைத்தடி ஊன்றி நடக்கும் சிவராஜூவைக் கீழே தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டுள்ளது. கீழே விழுந்ததில் அவருக்கு காது, வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றிலிருந்து உடனே ரத்தம் கசியத் தொடங்கியுள்ளது.
சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு சிவராஜுவின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு இருப்பதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் குணமடைந்தால் கூட படுக்கையாக தான் இருப்பார் எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்த செயற்கை சுவாசக்கருவியை நிறுத்தியதால் சிவராஜ் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே, சிவராஜு தம்மிடம் போதை பொருள் விற்பதற்கு முற்பட்டதாகவும், அதை நான் வாங்க மறுத்தபோது கைகலப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறையிடம் சுபீர் பொய் புகார் அளித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த சண்டைக் காட்சிகளைக் காட்டிய பிறகு சுபீர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளாார்.
ஒரு உயிருக்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதன் காரணத்தால் சுபீருக்கு 12 பிரம்படிகளும், 6 ஆண்டு மற்றும் 10 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.