இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் SGRV FRONT MAN என்ற முகநூல் பக்கத்தில் இணைவாசிகள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் SMRT சின்னம் பொறிக்கப்பட்ட அந்த பேருந்தினுடைய முன்பக்க கண்ணாடியானது முழுவதும் சிதைந்து உள்ளதும், அதனுடைய முன்பக்க பம்பர் முற்றிலும் நசுங்கிய நிலையிலும், மேலும் இடது பக்க கண்ணாடி துண்டு துண்டாக உடைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு புகைப்படத்தில் பேருந்தின் முன்னால் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருப்பதும் தூரத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி கட்டிடம் மங்கிய நிலையில் தெரிவதும் காண முடிகிறது.
இந்த விபத்து குறித்து SMRT நிறுவனம் கூறியதாவது: மார்ச் 20 ஆம் தேதி மாலை சுமார் 5:10 மணி அளவில் பேருந்து லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 178-ம் எண் கொண்ட அந்த பேருந்து உட்லண்ட்ஸ் சென்டர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மற்றொரு பேருந்திற்கு மாற்றப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் SMRT கூறியுள்ளது. யாருக்கும் எந்தவித காயமும் இந்த விபத்தின் மூலமாக ஏற்படவில்லை.