சிங்கப்பூர்: நேற்று (ஆகஸ்ட் மாதம் ) 13ஆம் தேதி காலை மவுண்ட்பேட்டன் சாலை மற்றும் கில்லெமார்ட் சாலை சந்திப்பில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டவுடன் கிடைத்த தகவலின் மூலம் அங்குள்ள சிவில் பாதுகாப்பு படை விரைந்து சென்று பார்வையிட்டனர். சேனல் 8 இன் விசாரணைக்கு பதிலளிக்க விதமாக இன்று காலை 8 மணி அளவில் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போது, ஒரு காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒருவரும் பின்புற பயணிகள் இருக்கையில் ஒருவரும் சிக்கி இருப்பதை கண்டு மீட்பு பணியாளர்கள் மீட்க தொடங்கினர்.
அவர்களை மீட்பதற்காக ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களையும் பயன்படுத்தினர் எனவும் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கும் ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு மற்றவர் கே. கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.