விலங்குநல நடவடிக்கையில் சர்ச்சை..!! அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்..!!
சிங்கப்பூர்:சிலேத்தார் வெஸ்ட் பண்ணையில் மூன்று நாய்களைப் பிடித்த நடவடிக்கை, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக தேசிய வளர்ச்சி துணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இதில் ‘பேபி பாய்’ என அழைக்கப்பட்ட நாய், விலங்குநல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், நாய்களைப் பிடிக்கும் நடைமுறைகள் குறித்து ஒருங்கிணைந்த விதிமுறைகளை மறுஆய்வு செய்து, தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.