தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!
சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது.
இந்த புதிய வகை டிரிங் நான்ஜிங்கில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் கிழக்கு சுரங்கப்பாதை நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கடையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ட்ரிங்க்ஸ் ஆனது அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு Menu – விலும் இடம் பெறவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் கூப்பன்களை வாங்கி கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது புதுவிதமான ட்ரிங் என்பதால் இளம் வாடிக்கையாளர்கள் இதன் சுவையை தெரிந்து கொள்வதற்காகவே இதை உண்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இந்த வான்டான்கள் பழுப்பு நிற மேல் உறையையும் கோழி மற்றும் தேங்காய் சதையை நிரப்பப்பட்ட உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது தனித்துவமான பச்சை தேங்காய் லட்டே சுவையை அளிக்கிறது.
மேலுரை சற்று கசப்பாகவும், உள்ளே இருப்பது உப்பும், இனிப்போம் கலந்த ஒரு சுவை கலவையாக இருப்பதால் இந்த உணவு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது.
இதில் காபியை பிசையும் போது காஃபின் சேர்க்கப்படுவதால் அதற்கு தனித்துவமான நிறமும் சுவையும் கிடைக்கிறது என கடை உதவியாளர் தெரிவித்துள்ளார். இப்பொழுது அந்த பொருள் நன்றாக விற்பனை ஆகிறது எனவும் மேலும் சில கடைகளில் தற்காலிக இருப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
அதில் உள்ள காஃபினின் சரியான அளவு தெளிவாகத் தெரியவில்லை. பொருளின் உரையில் உற்பத்தி தேதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றின் அளவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அந்த பொருட்களைப் பயன்படுத்திய உள்ளூர் செய்தியாளர்களுக்கு எவ்வித அசெளகரியமும் ஏற்படவில்லை. ஆனால் தலை சுற்றல் மற்றும் அசெளகரியம் ஏற்பட்டதாக இணையத்தில் சர்ச்சை தொடர்ந்து பரவி வருகிறது.
காஃபின் படபடப்பு, பதட்டம் மற்றும் தூக்கையின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்திய கூடியது. அதனால் பெரியவர்கள் 400 மில்லிகிராமிற்கு குறைவாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்ள் தங்களது சொந்த சூழ்நிலைகளைப் பொறுத்து பொருளை வாங்குவதா? அல்லது பயன்படுத்துவதா? என்பதை முடிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.