சிங்கப்பூரில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க பேச்சுவார்த்தை..!! எதற்காக..??
சிங்கப்பூரில் ஜேம்ஸ் (உண்மையான பெயர் அல்ல) என்பவர் டேட்டிங் (Dating) தளத்தில் 16 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் தகவல்களை சேகரித்துள்ளார்.
அந்த டேட்டிங் தளத்தில் (லியோ மேட்ச்) அவர் ஒரு விளையாட்டு பள்ளியைச் சேர்ந்தவர் என்றும், அந்த தளத்தில் நண்பர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களைக் கட்டாயப்படுத்தி தவறான உறவு வைத்துக் கொண்டதற்காக இந்த தண்டனையானது வழங்கப்பட்டுள்ளது.
வயது குறைந்தவர்களைப் பாலியல் ரீதியாக குறிவைத்த குற்றத்திற்காக பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜேம்ஸ் உட்பட இரு ஆண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் காதலர்களைத் தேடிக்கொள்ள உதவும் செயலிகளை 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தளத்தில் மட்டும் அப்படி எந்த தடையும் இல்லை.
டெலிகராம் புள்ளி விவரப்படி லியோ மேட்சில் 14 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் இருப்பதாகவும், அதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பதிவு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டுகளில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆனது, அவர்களது வயதிற்கு பொருந்தாத செயலிகளைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக டிண்டர் (Tinder) என்னும் செயலியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாது.
ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று இளம் வயதினரை பாதுகாப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் ஆஸ்திரேலியா அரசுடன் இணைந்து சமூக ஊடகத்திற்கான தடைக் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.