அப்போது அவர் வெளிநாட்டு ஊழியரான ஜஸ்பீர் சிங்கிடம் பேசத் தொடங்கினார் திடீரென்று காரணம் ஏதுமின்றி லேகா ஜஸ்பீர் சிங்கின் மார்பில் கை வைத்து அவரை ஆற்றில் தள்ளி விட்டார்.
சம்பவத்தை கண்ட தம்பதி கூச்சலிட லேகா அங்கிருந்து தப்பி ஓடினார்.
காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் ஆற்றில் இருந்து ஜஸ் பீர் சிங்கை மீட்க போராடினர்.
ஆனால் ஜூலை 1ஆம் தேதி அதிகாலை ரெண்டு மணியளவில் தான் அவரது உடல் மீட்கப்பட்டது.
பின்பு அன்று காலை சுமார் எட்டு மணி அளவில் லேகா கைது செய்யப்பட்டார்.
வேண்டுமென்றே ஒருவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக லேகாவிற்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறை அல்லது பத்தாயிரம் மல்லி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு இருக்கலாம்.
முதலில் லேகா மீது வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.ஆனால் அவர் கொள்ளும் நோக்கத்துடன் வெளிநாட்டு ஊழியர் ஜஸ்பீர் சிங்கை தள்ளி விடவில்லை என்று தற்காப்பு தரப்பு வாதிட்டு குற்றச்சாட்டின் கடுமையை குறைத்தது.
இறுதியாக அவருக்கு 35 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் ஜஸ்டின் இந்தியாவில் தனது தாய் மரணம் அடைந்ததால் அந்த துயரத்தில் குடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் திருமணமானவர் அவருக்கு இரண்டு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவரது குடும்பம் இவரது வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.