சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் கைது..!! ஜொகூர் SouthKey இல் நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் கைது..!! ஜொகூர் SouthKey இல் நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் கடந்த வாரம் மார்ச் 14ஆம் தேதி ஜோகூர் SouthKey இல் அதிகாலை 5 மணி அளவில் 32 வயது ஆன ஆடவர் ஒருவர் கூர்மை மிகுந்த ஆயுதத்தால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சந்தேகத்திற்குரிய 5 நபர்களை அடையாளம் கண்டதாக ஜொகூர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சந்தேகப்பட்ட நபர்களில் ஒருவரை குடிநுழைவு சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் செல்ல முயன்ற போது நேற்று முன்தினம் (மார்ச் 18ஆம் தேதி) நள்ளிரவு 12 15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

மீதமுள்ள நான்கு நபர்களையும் அதே நாள் மாலை 6:00 மணி அளவில் சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் சிங்கப்பூரிலேயே கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த தகவலை சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இவர்கள் 23 – 27 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேபான் கார்டன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது சிக்கியுள்ள அவர்களை மலேசிய காவல்துறையிடம் ஒப்படைத்ததாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை எனவும் பரிசோதனையின்போது தெரிய வந்தது. மேலும் அவர்களில் யாருக்கும் இதற்கு முன் எந்த ஒரு குற்ற பதிவுகளும் இடம் பெறவில்லை.

இந்தக் குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK