எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!!
சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (மே 4) முதல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட எல்லை தாண்டிய டாக்சிகள், சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும்.
மேலும் மலேசியாவில் பயணிகளை இறக்கி விடும் இடங்கள் ஜோகூர் பாரு, இங்கந்தர் புத்தேரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாாய் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் உள்ள எந்த இடத்தையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட உள்ளது.
பயணிகளை ஏற்றி செல்லும் இடங்களைப் பொருத்தவரைப் பதிவு செய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டி டாக்சிகளுக்கு மற்ற நாட்டில் கூடுதலாக 3 இடங்கள் ஒதுக்கப்படும்.
தற்போதுள்ள லார்கின் சென்ட்ரல் பாரு நிலையம் தவிர மலேசிய டாக்ஸிகள் ஜோகூர் பாருவில் உள்ள டாப்பன் மால், தி மால் மிட் வேலி சவுத்கீ மால் மற்றும் அங் சானா மால் ஆகிய இடங்களிலும் பயணிகளை ஏற்றி செல்ல முடியும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட 6 இடங்களில் பயணிகள் தனியார் வாடகை கார் தளங்கள் மூலம் மட்டுமே சேவைகளை முன்பதிவு செய்ய முடியும்.
ஜோகூர் பாரு வில் உள்ள தற்போதைய லார்கின் சென்ட்ரல் MRT நிலையத்திலும், சிங்கப்பூரில் உள்ள வான் ஷான் தெரு டாக்ஸி நிலையத்திலும், பயணிகள் தொடர்ந்து தெருவில் டாக்ஸி அழைக்கலாம் அல்லது தனியார் வாடகை கார் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
விலை மாற்றங்கள்: மலேசியாவின் புக்கிட் மெர்டாஜமில் இருந்து, லார்கின் பேருந்து நிலையத்தில் அல்லது 35 கிலோமீட்டர் தொலைவிற்குள் இறங்குவதற்கு வாகன வகையைப் பொருத்து ஒரு வாகனத்திற்கு RM80 முதல் RM180 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
பேருந்து நிலையத்திலிருந்து, மலேசியாவின் புக்கிட் மெர்டாஜமில் அல்லது 35 கிலோமீட்டர் தொலைவிற்குள் இறங்குவதற்கு RM240 முதல் RM540 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தலா 100 எல்லை தாண்டிய டாக்ஸி ஒதுக்கீடுகளை புதிதாக சேர்க்க உள்ளது. தற்போதுள்ள 200 ஒதுக்கீட்டுடன் சேர்த்து மொத்தம் 600 வாகனங்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா போக்குவரத்து அமைச்சகங்கள் நேற்று (ஏப்ரல் 30) இது குறித்த ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எல்லைத் தாண்டிய டாக்சி சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்ல இரு போக்குவரத்து அமைச்சகங்களும், தொடர்புடைய முதன்மைகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.