சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!
சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது.
அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார்.
அவை பின்வருமாறு: செயற்கை நுண்ணறிவு இந்த காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் ஆகும். அது பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பில் அதன் தாக்கத்தை தற்பொழுது தொடங்கியுள்ளது.
தற்போது மின்னஞ்சல்களை எழுதவும், அறிவிப்புகளைத் தொகுக்கவும் தொழில்நுட்பத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மிகவும் நவீனத்துறைகளில் Al குறியீடாக்கத்திற்கு உதவ முடியும். சிக்கலானப் பணிகளைத் தன்னிச்சையாக திட்டமிட்டு முடிக்கவும் முடியும்.
இதனால் Al உற்பத்தி திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முழுத் தொழில்துறைகளையும் மறுவடிவமைக்க முடியும். இதனால் சில வேலைகள் மாறும், சில பதவிகள் இல்லாமல் கூட போகும்.
இந்த மாற்றங்கள் சவால்கள் இல்லாமல் இருக்கும் என்று அரசாங்கத்தால் எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது. வேலைகள் மாறும் சில பதவிகள் இல்லாமல் கூட போகும். இந்த மாற்றத்தின் வேகமானது நாம் இதற்கு முன் கண்டிராத வேகமாக இருக்கும் என்று அவர் அந்தப் பேரணியில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நமது பொருளாதாரம் மாறும்போது நாம் புதிய மற்றும் சிறந்த வேலைகளை உருவாக்குவோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன் எனவும், நம்மால் எல்லா வேலைகளையும் காப்பாற்ற முடியாமல் போகலாம்; ஆனால் ஒவ்வொரு தொழிலாளியையும் நிச்சயமாக பாதுகாப்போம் எனவும், ஏனென்றால் சிங்கப்பூரில் ஒவ்வொரு தொழிலாளி முக்கியமானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் தாக்கத்தை சமாளிப்பதற்கு சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில், அரசு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்த உள்ளது.
வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ஸ்கில்ஸ் பியூச்சர் (SkillsFuture) அமைப்பை மேம்படுத்த உள்ளது எனவும், வேலை இல்லாதவர்கள் அல்லது தொழிலை மாற்றுபவர்கள் வேலை தேர்தல் உதவித் திட்டத்தின் மூலம் ஆதரவை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
SkillsFuture வலைதளமானது பொதுமக்கள் அவர்களுக்கு பொருத்தமான படைப்புகளை கண்டறியும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்படும். அந்த வலைத்தள மூலம் அரசாங்கம் பொதுமக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேருபவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை 6 மாதங்கள் வரை இலவசமாக பயன்படுத்தலாம். மேடம் அவர்கள் கற்றுக் கொண்டவற்றை நேரடியாக தங்களது பணிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் வோங் குறிப்பிட்டிருக்கிறார்.