iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.!

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.!

சிங்கப்பூர்: Apple நிறுவனத்தின் iMessage சேவையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் 30,000-க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான iMessage கணக்குகளை போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர்.

கூரியர் நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து iMessage மூலம் அனுப்பப்பட்ட மோசடி செய்திகளால் மட்டும் சுமார் S$2.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் Ninja Van, J&T Express, SPX Express உள்ளிட்ட கூரியர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

பார்சல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, குறிப்பிட்ட இணையதள இணைப்பைத் திறக்குமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் முதலில் “Y” அல்லது “1” என பதிலளிக்குமாறும், அதன் பின்னர் அனுப்பப்படும் link-ஐ கிளிக் செய்யுமாறும் கூறுகின்றனர்.

அந்த போலி இணைப்புகளைத் திறப்பதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள், கணக்கு விவரங்கள் அல்லது வங்கி தொடர்பான முக்கிய தகவல்கள் மோசடிக்காரர்களின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

அரசு நிறுவனங்களும் கூரியர் நிறுவனங்களும் iMessage மூலம் பொதுமக்களைத் தொடர்புகொள்ளாது என சிங்கப்பூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.


தெரியாத எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்குரிய iMessage-களில் உள்ள link-களை திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட அல்லது வங்கி தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், iPhone பயனர்கள் “Filter Unknown Senders” மற்றும் “Filter Spam” போன்ற பாதுகாப்பு வசதிகளை இயக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

ஒரே ஒரு link-ஐ தவறுதலாக கிளிக் செய்வது, உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் ஆபத்தில் சிக்க வைக்கலாம். எனவே, எதிர்பாராத iMessage வந்தால் அவசரப்பட்டு பதிலளிக்காமல், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வது மிகவும் அவசியம்.

ஒரு நொடி கவனம்… பல ஆயிரம் டாலர்களை இழப்பதைத் தடுக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்!