சிங்கப்பூர்: சிங்கப்பூரில் (09/09/2025) செவ்வாய்க்கிழமை சுங்கத்துறை வழியாக உள்ளூர் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை சோதித்துள்ளது.
இதனை அடுத்து இன்று (12/09/2025) சமூக வலைதளமான பேஸ்புக்கில் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் ஆனது ஒரு பதிவு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிச் செல்லும் போது சோதனை சாவடியில் சுங்கத்துறை வழியாக உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டி சென்ற அவரை சோதித்துள்ளது.
சோதனையின் போது ஒரு குழந்தையின் தள்ளுவண்டியில் மறைத்து வைக்கப்பட்ட இ-சிகரெட்டை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இ-சிகரெட்டை நாட்டிற்குள் கடத்த முயன்ற காரணத்தினால் சிங்கப்பூரைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். மேலும் 700 யுவான் அபராதமாக விதிக்கப்பட்டது.
மலேசியாவில் ஈ சிகரெட் களை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது என குடி வரவுத்துறை கூறியுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இ- சிகரெட்டுகளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதோ அல்லது உற்பத்தி செய்வதும் ஒன்று செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் எடுக்கப்படும் என அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த சட்ட விரோதமான செயல் நடந்துள்ளது.