சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க?

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்....

நிலப் போக்குவரத்து ஆணையமும் சுற்றுலா வாரியமும் கடந்த வாரம் ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கையை தொடங்கின. சட்ட விரோதமாக பாயிண்ட் டு பாயிண்ட் பயணிகள் சேவைகளை வழங்கிய எட்டு ஓட்டுநர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் சிங்கப்பூரில் அனுமதி இல்லாத சுற்றுலா வழிகாட்டு சேவைகளை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

பொது சேவை வாகன உரிமம் இல்லாமல் இதுபோன்ற சேவைகளை வழங்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் $3000 வெள்ளி வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இது போன்ற சட்டவிரோத சேவைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan