ஜூரோங் வட்டார ரயில் பாதை..!! எப்போது திறக்கப்பட உள்ளது..??
ஜூரோங் வட்டார பாதையில் ரயில் பாதையானது அடுத்த ஆண்டு இறுதியில் திறப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தற்காலிக போக்குவரத்து துறை அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைப்பாடுகள் பாதுகாப்பான முறையில் முடிப்பதை உறுதி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதாகவும் போக்குவரத்து அமைச்சின் செலவின ஒதுக்கீட்டு குழு விவாதத்தில் அதைப்பற்றி பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
புன் லே, சுவா சூ காங் முனையங்கள் உட்பட ஜூரோங் வட்டார பாதையில் முதற்கட்டத்தில் 10 ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜூரோங் வட்டார பாதையின் முதல் கட்ட எம் ஆர் ட நிலையங்கள் ஆனது ஆறு மாத தாமதத்தை கடந்து வருகின்ற 2028 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது என்றால் அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.