மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

மலாய் கலாச்சார மையம் மீண்டும் திறப்பு..!! விழா விருந்தினராக பிரதமர் பங்கேற்பு..!!

சிங்கப்பூர் :  3 ஆண்டுகளுக்கு மேலான சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு மலாய் கலாச்சார மையம் நேற்று (ஏப்ரல் 25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த மையத்தின் தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார்.

விழாவில் அவர் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களின் உயிர் சக்தியையும் ஆற்றலையும் பேணி பாதுகாக்கும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என உரையாற்றினார்.

இந்த புதுப்பிக்கப்பட்ட மலாய் கலாச்சார மையம் உள்ளூர் மலாய் சமூகத்தின் பன்முக பண்புகள் குறித்த ஒரு விரிவானப் பார்வையை வழங்கும். பார்வையாளர்கள் புதிய பல்லூடாக அமைப்புகள் மூலமாக சமூகத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், 250 வரலாற்றுப் பொருட்களையும் இந்த மையத்தில் பார்வையிடலாம்.

மேலும் அவர் வரலாற்று நிகழ்வுகள் அடுத்த தலைமுறை கடத்தப்பட வேண்டும் எனவும், தேசத்தை கட்டி எழுப்புவது என்பது தலைமுறைகள் கடந்து நிற்கும் ஒரு பொதுவான நோக்கம் என்பதையும் இந்த மையம் நினைவூட்டுவதாக கூறினார்.

இன்று நம்மிடம் இருப்பது வெறும் மலாய் கலாச்சாரம் மட்டுமல்ல அது சிங்கப்பூரில் மலாய் கலாச்சாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது நம் நாட்டிற்கு தலைமுறைகளை கடத்தப்பட்ட மரபுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பரந்த மலாய் உலகின் செழுமையான ப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறினார்.

இந்த பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தவும், சமூகத்தின் உயிர் சக்தியைப் பேணவும் மேலும் பல்கலாச்சார திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் உரையாடல் மற்றும் பரிமாற்றத்திற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், கம்போங் கிளாம் சமூகத்தில் உள்ள அதன் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு மலாய் கலாச்சார மையத்தை பிரதமர் ஊக்குவித்துள்ளார்.

கலாச்சாரப் பாரம்பரியம் தொடர்பான வணிகங்களுக்கும், கலாச்சார நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK