பயணிகளின் பெட்டிகள் கையாளுவதில் அலட்சியம்..!! மன்னிப்பு கேட்ட SATS நிறுவனம்..!!
சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பயணிகளின் பெட்டிகளை கையாளுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். இதற்காக SATS நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் காணொளி ஆனது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் ஆனது சென்ற வாரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) மாலை 5:15 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 2வது முனையத்தில் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து SATSநிறுவனம் கூறியதாவது: தூக்கி எறியப்பட்ட அந்த பெட்டிகள் காலையில் புறப்பட இருந்த விமான பயணிகளுக்கு சொந்தமானது எனவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறியது.
அதில் பயணம் செய்யவிருந்த பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் அந்த பெட்டிகள் இணைப்பில் இருந்து அகற்றப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.
பயணிகள் புதிய விமானத்தில் செல்ல குறைந்த நேரமே இருந்த காரணத்தால், பெட்டிகளை மாற்ற வேண்டி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பெட்டிகளை முறையாக கையாளுவதன் முக்கியத்துவம் குறித்து அவருக்கு உணர்த்தப்பட்டதாகவும் SATS கூறியுள்ளது. மேலும் SATS நிறுவனம் அதிகாரியின் அந்த செயலுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.