சிங்கப்பூரில் பேருந்து வருகை நேர தகவல்களுக்காக புதிய திட்டம்..!! LTA அறிக்கை..!!
சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் தகவல்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் வண்ண இ-பேப்பர் திரை சோதனையை மேற்கொள்ள இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
லிட்டில் இந்தியா அருகே உள்ள 40019 பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வருகை நேரத் தகவலை இடம்பெற்றுள்ள வண்ன இ-பேப்பர் திரையைப் பொதுமக்கள் பார்வைக்காக LTA வைத்துள்ளது.
இந்த புதிய திட்டத்தை தொடங்குவதற்காக சிங்கப்பூர் தொலைத்தொடர்பு குழும்பத்தின் கீழ் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான NCS உடன் நிலப்போக்குவரத்து ஆணையம் இணைந்து நேற்று (மே 13) இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டில் இ- பேப்பர் திரைகள் உள்நாட்டில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த காலத்தில் தொழில் நுட்பத்தால் சிங்கப்பூரில் வெளிப்புற சூழலையும், காலநிலையையும் தாங்க முடியவில்லை.
மேலும் கடுமையான சூரிய ஒளியில் அந்த திரைகள் மங்கைவிடும் தன்மை கொண்டவைகளாக அப்போது இருந்தன.
மின்னணு காகித தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கொண்டு, சூரியன் மற்றும் மின் ல அமைப்புகள் குறைந்த ஆற்றல் உணர்வை பராமரிக்க முடியும் என்பதையும், வெளிப்புறச் சூழல்களில் வண்ணம் மின்னனணு காகிதத் தொழில்நுட்பத்தின் செயல் திறனையும் மதிப்பீடு செய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது.
சில இணையவாசிகள் இந்த இ- பேப்பர் திரைகளின் புகைப்படங்களை “சிங்கப்பூர் இன்சூரன்ஸ் ” என்ற சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் குறைந்த பயணிகள் போக்குவரத்து நிலையங்களில் ஆற்றல் நுகர்வைக் குறைக்க இது உதவும் என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முன்னோட்டத் திட்டமானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை செயல்படுத்தப்பட உள்ளது . பொதுமக்கள் பேனலில் உள்ள QR குறியீடுகளைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் பொதுமக்களிடம் LTA தெரிவித்துள்ளது.