சிங்கப்பூரில் நேற்று(11/09/2025) கேலாங் லோரோங் 8 இல் கொள்ளையடிக்க முயற்சித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததாக அறிக்கையை தெரிவித்தது.
தகவல் அறிந்த பிறகு காவல்துறையினர் விசாரணை முழுமையாக நடத்திய பிறகும் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகும் சந்தேகிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதி செய்த போலீசார் 7 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை.
இவர் 38 வயதுடைய ஒருவரின் மொபைல் ஃபோனை பாக்ஸ் கட்டர் மூலம் கொள்ளையடிக்க முயற்சித்ததாக தெரியவந்தது.
கையில் ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு நபரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த 31 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் நாளை (12/09/2025) ஆஜர்படுத்தப்படுவார்.