சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!!

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!!

சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றில் மே 14ஆம் தேதி அன்று கான்கிரீட் சிலாப் தாக்கியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

250A டர்ஃப் க்ளப் ரோட்டில் நிகழ்ந்த வேலை தொடர்பான இந்த சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 1:40 மணியளவில் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்து காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் CSCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 23 வயது நபர் சம்பவ இடத்தில் அசைவின்றி கிடந்துள்ளார். அவரை பரிசோதித்த
SCDF படையின் துணை மருத்துவர் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் எந்த ஒரு நோக்கமும் இல்லை என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

குறுக்குத்தீவு MRT வழிதடத்திற்கான கட்டுமானப் பணிகள் அந்த இடத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கட்டுமான தளத்தில் காண்கிரீட் தரையைப் பிளக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது இறந்த அந்த நபர் பாதுகாப்பிற்காக வகை போக்குவரத்தை சீர் செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது இந்த விபரீத செயல் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகத்தின் பேச்சாளர் சில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கோ கோக் லியோங்(Koh kock leong) கன்ஸ்டிரக்ஷன் என்ற நிறுவனத்தின் தொழிலாளர் ஆன அவருக்கு ஆபத்துக்களைக் கண்காணித்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது.

தரையை பிளக்கும் பணியின் போது தற்காலிகமாக போடப்பட்டிருந்த கான்கிரீட் பகுதி ஒன்று அந்த தொழிலாளரின் மீது தாக்கியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக தற்காலிக கான்கிரீட் கட்டமைப்புகளை உடைத்து அகற்றும் பணி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அப்போது அந்தப் பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் மனிதவள அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK