தற்போது மத்திய கிழக்கில் நிலவு வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்கனவே சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்து இருக்கிறது. அதனோட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விநியோகமும் தற்போது பாதித்துள்ளது.
அண்மையில் மூலப்பொருட்களின் விலையானது 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக உள்ளூர் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் பிளாஸ்டிக் விற்பனை செய்பவர் உணவு மற்றும் பான தொழிலுக்கு முக்கியமாக பார்சல் பெட்டிகள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற பேக்கேஜிங் பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வாரமும் மூலப்பொருட்களின் விலைகள் ஆனது சரி செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த ஒரு மாதத்தில் செலவுகள் ஆனது 15 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாக வணிக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிளாஸ்டிக் விற்பனை மேலாளர் லாம் ட்ஸே செங் கூறியது: செலவுகள் அதிகரித்துள்ளதால் வியாபாரம் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கிறது மேலும் சில உணவு விடுதி நிறுவனங்கள் நிலைகள் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அந்த செலவுகளில் ஒரு பகுதியை நாங்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.
மூலப் பொருட்களின் விற்பனையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சில தொழிற்சாலைகளால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மூலப் பொருட்களை பெற முடியாததால் அதன் விற்பனையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளூரில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் தேவைகளும் ஒப்பீட்டளவில் நிலையாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கொள்முதல்களை அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களை தெரியாமல் பதுக்கி வைத்த சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என்றும் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்துகின்ற அளவை பராமரிப்பது உறுதி செய்வதற்கு நாங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் திடீரென்று அதிக ஆர்டர்கள் வந்து அவர்களின் கடைகளில் கூடுதல் பிளாஸ்டிக் பெட்டிகள் குவியும் நிலையை நாங்கள் விரும்பவில்லை என ஜார்ஜ் லாம் கூறியுள்ளார்.
இந்த ஒரு குறுகிய காலத்தில் செயல்பாட்டு செலவுகள் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாகவும் நிலைமை மோசமடைந்தால் அந்த செலவுகளில் ஒரு பகுதியை நுகர்வோர் செலுத்தும் படியாக கட்டாயம் ஏற்படும் எனவும் வணிக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.