சிங்கப்பூரில் தீ விபத்து இருவர் மரணம்! எங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தீ விபத்து இருவர் மரணம்! எங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தோ பாயோ வட்டாரத்தில் லோராங் 1 ல் உள்ள புளோக் 173ல் ஜூலை 22 ஆம் தேதி 7.30 மணி அளவில் தீ சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டு உள்ளது.

கட்டடத்தின் இரண்டாம் தளத்திலுள்ள வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டிற்கு சென்று தீயை அணைத்தனர்.

அப்பொழுது இரண்டு நபர்கள் சுயநினைவு இல்லாமல் இருந்ததே அதிகாரிகள் கண்டனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தனது பதிவில் குறிப்பிட்டது.

சுயநினைவு இல்லாமல் இருந்த இருவரையும் உதவி மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர்கள் இறந்து விட்டனர் என்று காவல்துறை கூறியது.

இரண்டாம் தளத்தில் உள்ள மூன்று வீடுகள் தீச்ச சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன அந்த வீடுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வேறு இடங்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,என்று பீஷான்-தோபாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காய் யின்சோ தெரிவித்தார்.

மாண்டவர்களின் வயது 50 களில் அல்லது 60களில் இருக்கும் என்று அக்கம்பக்கத்தினர் கூறினார். அவர்கள் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு மேலாக வசித்து வந்ததாக கூறப்பட்டது.

இத்தி சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan